மக்களவை தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கட்டுப்பாடுகள் குறித்து பேசியுள்ளார்.
ஜூன் 4ம் தேதி வரை ரூ.50 ஆயிரம் எடுத்து செல்ல தடை
பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை தமிழகம் முழுவதும் ரூ.208 கோடி பணம், பொருட்கள் ஆகியவை தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் தேர்தல் நடைமுறை ஜூன் 4ம் தேதி வரை அமலில் இருக்கும். அதாவது ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு முடிந்த பிறகும் வாகன சோதனை தொடர்ந்து நடைபெறும். அதன்படி உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் பேரும் பறிமுதல் செய்யப்படும். இந்த கட்டுப்பாடுகள் ஜூன் 4ம் தேதி வரை தொடரும் என தெரிவித்துள்ளார்.