நாட்டின் வாழும் பெண்ககளுக்காக கொண்டு வரப்பட்ட அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் லோன் வாங்குவது எப்படி குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
பெண்களே லோன் வேணுமா? ரூ.50000 அளிக்கும் அன்னபூர்ணா யோஜனா
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக மத்திய அரசு பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. மேலும் சுயதொழில் செய்து பெண்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, நிறைய சலுகைகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கு, மூலதனம் என்பது பெரிய தடையாக இருக்கிறது. அப்படி தவிக்கும் பெண்களுக்கு கை கொடுத்து உதவுவதற்காகவே கொண்டுவரப்பட்ட திட்டம் தான் அன்னபூர்ணா யோஜனா திட்டம். மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ், உணவு கே பிசினஸில் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூ. 50,000 வரை வங்கி கடன் வழங்கப்படுகிறது. மேலும் இந்த தொகையை பயன்படுத்தி சமையல் கருவிகள், சமையல் பாத்திரங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் உணவு மேஜை போன்ற பொருட்களை வாங்குவதற்காக பெண்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் பெண்களுக்கு இந்த கடனுக்கு முதல் தவணை கட்ட தேவையில்லை. அதுமட்டுமின்றி கடனை எளிய தவணை முறையில் கிட்டத்தட்ட 36 மாதங்களில் தவணையை கட்டி முடிக்கலாம். அதாவது 3 வருடங்களுக்குள் திருப்பி செலுத்தலாம். வட்டி விகிதம் மாத்திரம் சந்தை நிலவரம்படி மாறக்கூடும் என்று தெரிவித்துள்ளது. எனவே இந்த திட்டத்தின் மூலம் லோனை பெற விரும்பும் பெண்கள் கூடுதல் தகவலுக்கு எஸ்பிஐ வங்கியின் கிளை-களை தொடர்பு கொள்ளலாம். மேலும் SBI வங்கியின் மூலமாகவே தங்களது கடன் தொகையையும் பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் சேருவதற்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,பான் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்டவை அவசியம். இதுகுறித்த கூடுதல் தகவலுக்கு, https://lakhpatididi.gov.in/ என்ற வெப்சைட்டை அணுகலாம்..