கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுலா பயணிகளே – திற்பரப்பு அருவியில் குளிக்க தடை
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருவதால் மக்கள் குளிர் காயும் விதமாக நீர் நிலையங்கள் உள்ள சுற்றுலா தளத்திற்கு கோடை விடுமுறையை கொண்டாட ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து ஒரு நொடிக்கு கிட்டத்தட்ட 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்து வருகிறது. எனவே சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கோதையாறு, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளின் அருகே கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.