மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் மது கிடைக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடையில் குறைந்த விலையில் மது விற்பனை
மக்களவை தேர்தல் இன்னும் 10 நாட்களில் தொடக்க இருக்கும் நிலையில், ஏழு கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது. அதன்படி ஆந்திராவில் மே 13 ஆம் தேதி மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற இருக்கிறது. தற்போது ஆட்சியை தக்க வைத்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாஜக கட்சியுடன் சேர்ந்து சந்திரபாபு நாயுடுவும், ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணும் களம் காண்கின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியில் போட்டியிடும் நிலையில் தற்போது அவரின் பரப்புரையின் போது, தற்போதைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், மது உட்பட அனைத்து விதமான பொருட்களின் விலையும் எக்குத்தப்பாக உயர்ந்துவிட்டது. சொல்லப் போனால் 50 மில்லி லிட்டர் மதுவின் விலை 60 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆனால் இம்முறை தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால், தரமான மதுவை குறைந்த விலைக்கு வழங்கப்படும் என்று அழுத்தி கூறியுள்ளார். இதை கேட்ட மது பிரியர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.