2024-25 கல்வியாண்டில் 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வு வினாக்களில் சில மாற்றங்கள் கொண்டு வந்துள்ளதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொதுத்தேர்வு மாணவர்களே: இனிமே வினாக்கள் இப்படிதான் இருக்கும்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புக்கான இறுதி தேர்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல வகுப்புகளுக்கு கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. நடப்பு கல்வியாண்டின் இறுதிக்கு வரும் நிலையில் 2024-25 கல்வியாண்டில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா? என்று பலரும் கேள்விகள் எழுப்பிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ” 2024-25 கல்வியாண்டில் 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வு வினாக்களில் சில மாற்றங்கள் அமலுக்கு வர இருக்கிறது. அதன்படி இதுவரை கேட்கப்பட்ட வினாக்களில் Source Based மற்றும் Case Based என இரு பிரிவில் கேட்கப்படும் MCQ எனப்படும் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் கிட்டத்தட்ட 40 சதவீதம் இடம்பெற்றிருக்கும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
எனவே இந்த 2024-25 கல்வியாண்டு முதல் MCQ எனப்படும் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் 50 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. மேலும் நீண்ட வினாக்கள், குறுகிய வினாக்கள் என 40 சதவீதம் கேட்கப்பட்டு வந்த நிலையில், அது 30 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி Select response வகையிலான MCQ வினாக்கள் 20 சதவீதம் கேட்கப்படுவதில் எந்தவித மாற்றமும் இல்லை. மேலும் 9, 10 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாளில் எந்தவித மாற்றமும் இல்லை என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் சிபிஎஸ்இ 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள், கற்றல் செயல்பாடுகள் உள்ளிட்டவை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள https://cbseacademic.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.