தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் -  கைக்கு வரும் சூப்பர் டெக்னாலஜி… ரூ.101 கோடியில் அசத்தலான திட்டம்!தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் -  கைக்கு வரும் சூப்பர் டெக்னாலஜி… ரூ.101 கோடியில் அசத்தலான திட்டம்!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு 101 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சிறப்பு ஏற்பாடு ஒன்றை  செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும்  ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நவீன முறையிலான கற்றலை கற்பிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 2024-2025 கல்வியாண்டு முதல் ஆசியர்களுக்கான அனைத்து விதமான செயல்பாடுகளையும் ஆன்லைனில் மேற்கொள்ள இருக்கின்றனர்.

சொல்ல போனால் அசைன்மென்ட்கள், விடைத்தாள்களை திருத்துதல், மாணவர்களின் கற்றலை கண்காணித்தல் உள்ளிட்ட செயல்களை ஆன்லைன் மூலமே மேற்கொள்ளலாம். இதற்காக அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் டேப்லெட் (Tablet) வழங்கப்படவுள்ளது. எனவே தற்போது மக்களவைத் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் முடிந்த பிறகு முதற்கட்டமாக 79,723 டேப்லெட்கள் வழங்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி டேப்லெட்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு ரூ.101 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுத்தேர்வு மாணவர்களே: இனிமே வினாக்கள் இப்படிதான் இருக்கும் – சிபிஎஸ்இ கொண்டு வந்த மாற்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *