ஆணாக மாறிய பிரபல நடிகரின் மகள்
ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தவர் தான் நடிகர் பென் அஃப்லெக்கும். இவர் கடந்த 2005ஆம் ஆண்டு நடிகை ஜெனிபர் கார்னரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அவர்களுக்கு வயலட் ஆன் அஃப்லெக், செராஃபின் ரோஸ் எலிசபெத் அஃப்லெக் என்கிற மகள்களும், சாமுவல் கார்னர் அஃப்லெக் என்ற மகனொருவரும் இருக்கின்றார். இதனை தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த நட்சத்திர ஜோடி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஜெனிபர் கார்னரின் தந்தை வில்லியம் ஜாக் கார்னர் 85 வது வயதில் உயிரிழந்தார். அவரின் இறுதிச் சடங்கின் போது செராஃபின் கலந்து கொண்ட போது அதிர்ச்சியான விஷயத்தை தெரிவித்துள்ளார். அதாவது, செராஃபின் ரோஸ் எலிசபெத் அஃப்லெக் என்ற மகளுக்கு 15 வயதாகும் நிலையில், தற்போது அவர் ஆணாக மாறியுள்ளதாகவும், தன்னுடைய பெயரையும் மாற்றிக் கொண்டதாக தெரிவித்தார். தற்போது அவர் பேசியது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த விஷயம் ஹாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.