சானிடைசர் தொடர்ந்து பயன்படுத்துவதால் உயிரிழப்பு ஏற்படலாம் என அமெரிக்க சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களே அலர்ட் : சானிடைசரால் உயிரிழப்பு நேரிடலாம்
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒட்டு மொத்தம் உலகையே பதற வைத்து கொண்டிருந்த கொரோனா வைரஸ் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளது. அதற்கு முழு காரணம் அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசி மட்டுமின்றி, முக கவசம், சமூக இடைவெளி, சானிடைசர் உள்ளிட்டவைகளை மக்கள் கடைபிடித்ததாலும் தான் தற்போது பாதிப்புகள் குறைந்துள்ளது. இந்நிலையில் சானிடைசர்களை தொடர்ந்து பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என அமெரிக்காவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தற்போது எச்சரித்து உள்ளனர். இதன் காரணமாக அங்கு சந்தையில் விற்பனை செய்யப்பட்ட கற்றாழை ஜெல்களை மற்றும் கை சுத்திகரிப்பு திரும்பப் பெற அரசு உத்தரவிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சமீபத்தில் , ’அருபா அலோ அல்கோலடா ஜெல்’ மற்றும் ரூபா அலோ ஹேண்ட் சானிடைசர் ஜெல் ஆல்கஹால் 80%’ ஆகியவை திரும்பப் பெற உத்தரவிட்டது. மேற்கண்டவை உணவில் கலந்ததில், அதை சாப்பிட்ட குழந்தைகள் அதிக ஆபத்துக்கு ஆளானார்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் தொடர்ந்து சானிடைசரை பயன்படுத்தினால் அவர்களுக்கு தலைவலி, மங்கலான பார்வை, வாந்தி, குமட்டல் ஆகியவற்றில் ஆரம்பித்து கோமா, நிரந்தர பார்வையிழப்பு, வலிப்புத்தாக்கம், மத்திய நரம்பு மண்டலம் முடக்கம் மற்றும் கடைசியாக மரணம் வரைக்கும் செல்லலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.