மது போதையில் டிரைவர்: பள்ளி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 5 மாணவர்கள் பலி!! மது போதையில் டிரைவர்: பள்ளி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 5 மாணவர்கள் பலி!!

பள்ளிப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 மாணவர்கள் படுகாயம், 5 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தில் இருக்கும் கனினா கிராமம் அருகே பள்ளி பேருந்து ஒன்று விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரமலான் பண்டிகையான இன்று அரசு விடுமுறையாக இருப்பினும்  கனினா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்று வழக்கம் போல் செயல்பட்டுள்ளது. எனவே பள்ளிக்கு மாணவர்களை  தனியார் பள்ளி பேருந்து அழைத்து சென்றுள்ளது. அப்போது மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயற்சித்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான அந்த பள்ளி பேருந்தில் 4 – 10ம் வகுப்பு வரை பயிலும் 40 மாணவர்கள் இருந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 15 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் 5 மாணவர்கள் மட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள வெவ்வேறு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதுமட்டுமின்றி பேருந்து வாகனத்தை ஓட்டிட்டு வந்த டிரைவர் மதுபோதையில் இறந்ததாக அங்கிருந்த மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அம்மாநிலத்தின் கல்வித் துறை அமைச்சர், பேசியதாவது, ” மாணவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளுக்கு போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலை வசதி இல்லாத மலை கிராமம்: இறந்த மகனின் உடலை 8 கி.மீ. சுமந்து சென்ற அப்பா – கண்கலங்க வைக்கும் சம்பவம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *