GOAT திரைப்படத்தின் OTT உரிமையை பெற்ற நிறுவனம் ! திரைப்படம் வெளியாகும் தேதியை வெளியிட்ட படக்குழு - முழு தகவல் இதோ !GOAT திரைப்படத்தின் OTT உரிமையை பெற்ற நிறுவனம் ! திரைப்படம் வெளியாகும் தேதியை வெளியிட்ட படக்குழு - முழு தகவல் இதோ !

GOAT திரைப்படத்தின் OTT உரிமையை பெற்ற நிறுவனம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் இளைய தளபதி விஜய். தமிழகத்தில் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கப்பட்டு உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தற்போது GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது திரைப்படத்தை வெளியிடுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

AGS நிறுவனத்தின் தயாரிப்பில் சென்னை 600028, மங்காத்தா போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் GOAT திரைப்படமானது சென்னை, புதுச்சேரி, திருவனந்தபுரம் மற்றும் ரஷ்யா போன்ற பகுதிகளில் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது விஜய்யின் 69 வது திரைப்படம். அந்த வகையில் GOAT திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் தளபதி விஜய் நடிப்பதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் OTT உரிமையை பிரபல OTT நிறுவனமான நெட்ப்ளிஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனல் பறக்கும் அரசியல் களம் – முக்கிய அறிக்கையை வெளியிட்ட  தவெக கட்சி தலைவர் விஜய்!!

அதன் படி GOAT திரைப்படமானது வரும் செப்டெம்பர் 5 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *