சமீபத்தில் நடந்த பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக இரண்டு முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம்
பெங்களூருவில் மிகவும் பேமஸான ஹோட்டலாக விளங்கி வருகிறது ராமேஸ்வரம் கஃபே. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹோட்டலுக்கு உணவு வாங்க வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெடிக்க கூடிய மர்ம பொருள் இருந்த பையை அங்கேயே விட்டு சென்றார். அவர் சென்ற சில வினாடிகளில் மர்ம பொருள் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு விபத்தில் அங்கிருந்த கஸ்டமர்ஸ் மற்றும் ஊழியர்களுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. தொடர்ந்து இந்த சம்பவத்தை செய்தது யார் என்று போலீஸ் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

மேலும் இது தொடர்பாக ஒருவரை ஏற்கனவே கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர் மேலும் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். குண்டு வெடிப்பிற்கு பிறகு முசாவிர் ஹுசைன் ஹாஜிப், அப்துல் மதீன் தாஹா ஆகிய 2 பேரும் மேற்கு வங்கத்தில் பதுங்கி இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அதிரடியாக களத்தில் இறங்கிய என்.ஐ.ஏ அவர்களை கைது செய்தது. ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் என்ஐஏ இதுவரை 3 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.