நடிகரும் அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான அருள் மணி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கட்சி நட்சத்திர பேச்சாளர் மாரடைப்பால் திடீர் மரணம்
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் அருள் மணி. இவர் அழகி, தென்றல், தாண்டவக்கோனே என பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பையும் தாண்டி, இயக்குனருக்கான பயிற்சியும் எடுத்து வந்தார். அதுமட்டுமின்றி அவருக்கு இருந்த அரசியல் ஆர்வத்தால் அதிமுக கட்சியில் இணைந்தார். தற்போது நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலுக்காக அதிமுக கட்சிக்காக தீவிரமாக கழக பணியாற்றினார். நட்சத்திர பேச்சாளரான அவர், கடந்த 10 நாட்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு, நேற்று சென்னை திரும்பியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இந்நிலையில் அவர் தனது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நிலையில், சரியாக நேற்று மாலை 4.30 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் நேற்று இரவு 9.30 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அருள் மணியின் மறைவுக்கு அரசியல் கட்சியினர், திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் நான்கு நாட்களுக்கு முன்பு தான் திருச்சியில் நடைபெற்ற எடப்பாடியார் பொதுக்கூட்டத்தில் அவர் நடிகர்கள் சிங்கமுத்து, அருள்மணி, இயக்குனர்கள் மனோஜ் குமார், நாஞ்சில் பி.சி.அன்பழகன் ஆகியோருடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.