கொரோனாவை தொடர்ந்து அதிவேகத்தில் பரவும் தொற்று நோய் – அச்சத்தில் பொதுமக்கள் – அடுத்த தலைவலியா இது?

கொரோனாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கக்குவான் இருமல் தீவிரமாக பரவ தொடங்கி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக உலக நாடுகளை ஆட்டிப்படைத்த வைரஸ் தான் கொரோனா. தற்போது தான் இந்த மக்கள் இந்த வைரஸில் இருந்து மீண்டு வந்த நிலையில், தற்போது மக்களுக்கு அடுத்த தலைவலியாக ஒரு தொற்று உருவாகியுள்ளது. அதாவது கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் தற்போது வூப்பிங் (Whooping Cough) எனப்படும்  கக்குவான் இருமல் மக்களிடையே அதிக அளவு பரவி வருகிறது. இந்த தொற்றால் இ;இப்பொழுது வரை கிட்டத்தட்ட 13 பேர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த தொற்று  சீனாவில் மட்டுமல்லாது உலக அளவில் ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த தொற்று குழந்தைகளுக்கு தான் அதிகம் பரவி வருகிறது. அதுமட்டுமின்றி இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது கடினம். அப்படி முதலில் கண்டுபிடிக்க பட்டால்  ‘ஆன்டிபயாடிக்’ வாயிலாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் சீனாவில் குழந்தைகளுக்கு இதற்கான தடுப்பூசிகள் இலவசமாக போடப்படுகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்காவில், 7 வயது கீழ் உள்ளவர்களுக்கும், 7 வயதுக்கு மேற்பட்ட பட்டவர்களுக்கு என தனித்தனியாக தடுப்பூசிகள் உள்ளன. மூச்சுக் குழாயில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இருமல் நீடிப்பதாகவும், தொற்று தீவிரமடைந்த பின், உயிரிழப்பு ஏற்படவும் சாத்தியம் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

Schools Holiday: அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை –  தொடர்ந்து அச்சுறுத்தும் சிறுத்தை?

Leave a Comment