
பெற்ற தாயே குழந்தையை விபச்சாரத்தில் ஈடுபட வைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட 10 வயது சிறுமி
சமீப காலமாக பாலியல் தொடர்பான வழக்குகள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ஒரு தாயே தனது மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரபிரதேசம், காசியாபாத் பகுதியில் 2 குழந்தைகள் அவர்களது பெற்றோருடன் வசித்து வந்தனர். தந்தை இறந்ததால் குழந்தைகள் பாட்டி வீட்டில் வளர்ந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அக்குழந்தைகள் அம்மாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அதுமட்டுமின்றி அவர்களுடன் சேர்ந்து தாயின் ஆண் நண்பருடன் தங்கியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
குழந்தைகள் பாட்டி வீட்டில் இருந்தபோது அவருடைய தாயார் விபச்சாரத்தில் ஈடுபட்ட வந்த நிலையில், வீட்டில் இருந்த 10 வயது சிறுமியையும் பாலியல் தொழிலுக்கு தள்ளி விட்டார். அவருடன் இருந்த ஆண் நண்பரும் அந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதற்கு அவருடைய தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் தொல்லையை தாங்க முடியாத சிறுமி வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார். சாலையில் சென்று கொண்டிருந்த அந்த சிறுமியை காவல்துறை மீட்ட நிலையில், அவர்களிடம் அனைத்தையும் சிறுமி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தாயையும் அவரது ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.