மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
குடும்ப தலைவிகளே – மகளிர் உரிமை தொகைக்கு எந்த தடையும் இல்லை
தமிழக அரசு கொண்டு வந்த திட்டத்தில் ஒன்று தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம். பெண்களுக்கான இந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. அதன்படி மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000-யை வழங்கி வருகிறது. இந்நிலையில் இன்னும் ஏழு நாட்களில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படாது என்று செய்திகள் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகிறது என்பதை நாம் அறிவோம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகை ரூபாய். 1000 அளிக்க எந்தவித தடையும் இல்லை என்றும், இப்பொழுது செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களை தொடரலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.