தூத்துக்குடியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள்  வேலை நிறுத்தம்? பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்?தூத்துக்குடியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள்  வேலை நிறுத்தம்? பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்?

தூத்துக்குடி மாவட்டத்தில் அருகே உள்ள கிராமங்களில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அருகே உள்ள கிராமங்களில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. அதுமட்டுமின்றி அதே பகுதியில் 1200-க்கும் மேற்பட்ட (பேக்கேஜிங் யூனிட்) சார்பு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இந்த தீப்பெட்டிகளை வடமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும், ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். இதற்கிடையில் மத்திய அரசு ரூ. 20க்கு கீழ் உள்ள சிகரெட் லைட்டர்களை விற்பனை செய்ய தடை விதித்திருந்தது.

ஆனால்  சட்டவிரோதமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்து ரூ 10 க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு தீப்பெட்டி விற்பனையாவது குறைவாக இருக்கிறது என்பதை எதிர்க்கும் விதமாக நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் வேலை நிறுத்தம்  செய்ய இருப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் ஏப்ரல் 22-ம் தேதி வரை கிட்டத்தட்ட  10 நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி,  கடலையூர், இளையரசனேந்தல்,  கழுகுமலை,  எட்டயபுரம்,  குருவிகுளம்,  திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை  நிறுத்தம் செய்ய உள்ளதாக நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

வெயில் ஓவரா இருக்கா? அப்ப இங்க போய் சூட்டை தணிங்க மக்களே – குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *