டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்த நிலையில் வரும் ஏப்ரல் 15ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
கைதுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு
டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் விவகாரமாக டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், இந்த சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார். இதனால் அவரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தது. இதை எதிர்த்து பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டங்ககளை தொடர்ந்து நடத்தினர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் அரவிந்த் கெஜ்ரிவால், தாக்கல் செய்த மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் வரும் 15 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் எனத் தெரிகிறது.