மதுரை மாவட்டத்தில் திடீரென கனமழை வெளுத்து வாங்கி வருவதால் மக்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர்
குளிர்ச்சியாக மாறிய மதுரை மாவட்டம்
தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்தே வெயிலின் தாக்கம் கண்முடித்தனமாக அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக சில பகுதிகளில் 100 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் அதிகமாக இருந்து வருவதால், மக்கள் வெளியே வரவே பயப்படுகின்றனர். இது ஒரு பக்கம் இந்த வெப்பத்தின் சூட்டில் இருந்து மக்களை குளிரூட்டும் விதமாக சில பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் ஆனந்தமாக இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் தற்போது மதுரை மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று மதுரையின் அடையாளமான மீனாட்சி அம்மனின் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பித்த நிலையில் அடைமழை பெய்தது. தற்போது அதே போல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மதுரை மக்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர். மேலும் இன்னும் ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.