நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 17வது சீசனில் இன்று நடக்க இருக்கும் 27 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது.
RR Vs PBKS : சொந்த மண்ணில் வெற்றியை நோக்கி பஞ்சாப்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 27 வது லீக் ஆட்டம் மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது. சொந்த ஊரில் எப்படியாவது வெற்றியை நிலை நாட்ட வேண்டும் என்று பஞ்சாப் அணி முழுவீச்சுடன் தயாராகி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி கடந்த முறை தோல்வியை தழுவிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், இந்த முறை 5 வது வெற்றியை எப்படியாவது அடைய வேண்டும் என்று தீவிர முழுவீச்சில் இறங்கி வீரர்களை தயார் படுத்தி வருகிறது. மேலும் இந்த இரண்டு அணிகளும் இதுவரை நடந்த IPL போட்டிகளில் 26 முறை மோதியுள்ளது. இதில் ராஜஸ்தான் அணி அதிகமாக 15 முறை வெற்றி கோப்பையை சுவைத்துள்ளது. எனவே இந்த முறையும் ராஜஸ்தான் அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.