டெல்லி மாநிலத்தில் தனது மகனின் மழலையர் பள்ளி கட்டண பில்லை சோசியல் மீடியாவில் பகிர்ந்து தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.
மழலையர் பள்ளி கட்டணம் ரூ.4 லட்சமா?
நாடு முழுவதும் தனியார் பள்ளிகள் அதிகமாக இயங்கி கொண்டிருக்கிறது. மேலும் தங்களது குழந்தைகளின் கல்வி திறனை உயர்த்த பெரும்பாலான பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். ஆனால் மழலையர் பள்ளி கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் தனது மகனின் மழலையர் பள்ளி கட்டண பில்லை இணையத்தில் பகிர்ந்து தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது, டெல்லி மாநிலம் குருகிராமை சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவர் தனது மகனை மழலையர் பள்ளி ஒன்றில் சேர்த்துள்ளார். மேலும் தனது மகனுக்காக அவர் செலுத்திய கட்டணமாக ரூ.4,30,000 செலுத்தி உள்ளதாகவும், அதற்கான கட்டண பில்லை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வேதனை தெரிவித்துள்ளார். அதில், ” என்னுடைய ஒட்டுமொத்த படிப்பு செலவை விட எனது மகன் படிக்கும் மழலையர் பள்ளியின் ஓராண்டு கல்வி கட்டணம் அதிகமாக உள்ளது. அதாவது என்ட்ரி கட்டணம் ரூ.10,000. ஆண்டு கட்டணம் ரூ.25,000. 4 காலாண்டுக்கு ரூ.98,750 என ஓராண்டில் மொத்தம் ரூ.4,30,000 செலுத்த வேண்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் வாயடைத்து போய் உள்ளனர்.