Election Update: தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான ஊதியம் - ரூ.58.5 கோடியை அதிரடியாக ஒதுக்கிய அரசு!!Election Update: தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான ஊதியம் - ரூ.58.5 கோடியை அதிரடியாக ஒதுக்கிய அரசு!!

மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும்  ஊழியர்களுக்கு ஊதியம் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் மக்களவை தேர்தல் தொடங்க இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாட்டில் தேர்தல் ஆணையம் இருந்து வருகிறது. மேலும் ஏழு கட்டங்களாக நடக்க இருக்கும் இந்த தேர்தல் இன்னும் 4  நாட்களில் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் பணிக்காக  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்காக சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ” நடக்க இருக்கும் தேர்தலில் மக்களின் வாக்குகளை பெற அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும்  ஊழியர்களுக்கு ரூ.600 என ஊதியமும், தலைமை அலுவலகராக பணிபுரிபவர்களுக்கு ரூ.1,700 ஊதியமும் வழங்க அனுமதி அளித்துள்ளனர். மேலும் இந்த ஊதியத்தை கணக்கிட்டு ரூ.58 கோடியே 58 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்துள்ளனர். தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை வரும் ஜூன் 3ம் தேதி கணக்கிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை விட 50 வயது அதிகமான ஓவியரை திருமணம் செய்த பிரபல மாடல் அழகி – புகைப்படம் வைரல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *