சித்திரை திருவிழா 2024: ஏப்ரல் 23ம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!சித்திரை திருவிழா 2024: ஏப்ரல் 23ம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நாளான ஏப்ரல் 23ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மண்ணின் முக்கிய விழாவாக கொண்டாடப்படும் திருவிழா என்றால் அது மதுரை மீனாட்சி அம்மனின் திருவிழா. கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த தெருவில் ஏப்ரல் 23 தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா ஏப்ரல் 23 தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. அதாவது மீனாட்சி கல்யாணத்தை பார்பதற்காக ஏப்ரல் 21ம் தேதி கள்ளழகர் அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி புறப்படுகிறார்.

இதனை தொடர்ந்து ஏப்ரல் 22 ஆம் தேதி காலை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வு நடைபெற இருக்கிறது. அதன்பிறகு ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை 5.51 மணியிலிருந்து 6.10 மணிக்குள் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையடுத்து தொடர்ந்து, ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வு நடைபெறுகிறது. எனவே அந்நாளில் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு அழகரின் அருளை பெற பங்கேற்க வேண்டும் என்பதில் ஏப்ரல் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

Fishing Ban: இன்று முதல் அடுத்த 61 நாட்கள் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை – அமலுக்கு வந்த மீன்பிடி தடைக்காலம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *