மும்பையில் உள்ள வோர்லி என்ற பகுதியில் தொலைந்து போன குழந்தையை QR கோட் மூலம் குடும்பத்தினருடன் சேர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன குழந்தை – மனமுடைந்த பெற்றோர்கள்
சமீப காலமாக குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் மும்பையில் உள்ள வோர்லி என்ற பகுதியில் 12 வயது சிறுமி தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அந்த சிறுமி காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர்கள் கிட்டத்தட்ட 6 மணி நேரம் தொடர்ந்து தேடி வந்துள்ளனர். எங்கையும் தேடி கிடைக்காததால், மனமுடைந்து போன பெற்றோருக்கு ஒரு காவலர் தொலைபேசியில் அழைத்து சிறுமி என்னுடன் தான் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து பெற்றோர்கள் அங்கே சென்று சிறுமியை மீட்டனர். இது குறித்து பேசிய காவலர், குழந்தை காணாமல் போன பிறகு அவர் செய்வதறியாமல் முழித்து கொண்டு சுற்றி திரிந்தார். அப்போது எதர்ச்சியாக அந்த வழியில் அவரை பார்த்தேன். அந்த சிறுமியின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு லாக்கிட்டில் ஒரு QR Code இருப்பதை பார்த்தேன். அதை ஸ்கேன் செய்து பார்த்த போது அந்த சிறுமியின் பெற்றோர்கள் நம்பர் இருந்தது. அதன்பிறகு தான் பெற்றோர்களுக்கு தெரிவித்து வரவழைத்தேன் என்று கூறினார்.