5 வயது சிறுமி குழந்தையை பெற்றெடுத்து தாயாக மாறியுள்ள சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐந்து வயதில் தாயான சிறுமி – என்ன நடந்தது?
இந்த உலகத்தில் பல அற்புதமான நிகழ்ச்சிகள் ஆங்காங்கே அரங்கேறியுள்ளது. ஆனால் 5 வயது சிறுமி குழந்தையை பெற்றெடுத்து தாயாகி உள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை தான் என்று மருத்துவர்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். அதாவது கடந்த 1939ம் ஆண்டு லினா மடினா என்ற சிறுமி ஒருவருக்கு வயிறு பெரிதாக இருந்து வந்துள்ளது. இதை பார்த்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் கட்டியாக இருக்க கூடும் என நினைத்து அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த சிறுமியை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது அந்த சிறுமி ஏழு மாதம் கர்ப்பமாக இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. 5 வயதில் எப்படி ஒரு குழந்தை தாயாக முடியும் என்று வியந்து போய் பார்த்தனர். இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலமாக அச்சிறுமி குழந்தையை பெற்றெடுத்தார். மேலும் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர், சிறுமியின் உடல் அமைப்பு சிறியதாக இருந்ததால் மிகவும் கஷ்டமாக இருந்ததாக தெரிவித்தார். மருத்துவ வரலாற்றில் இளைய தாய் ஐந்தரை வயதில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார் என்று கூறினார்.
மேலும் குழந்தையின் எடை சுமார் மூன்று கிலோ. சிசேரியன் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் குழந்தைக்கு ஜெரால்டோ என்று பெயரிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அவர் எப்படி கர்ப்பமானார் என்பது மட்டும் புதிரான புதிராக இருக்கிறது. மேலும் லீனாவுக்கு மூன்று வயதிலேயே முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்டதாம். இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கூட யாரும் நம்பவில்லை, ஆனால் அதற்கான ஆதாரமான வீடியோ, எக்ஸ்ரே, அறிக்கைகள் ஆகியவை வைத்து இது ஒரு உண்மை சம்பவம் என்று தெரிகிறது.