சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டு சிறை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இருந்து வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர் மக்களின் வாக்குகளை பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இன்று தேர்தல் ஆணையம் முக்கியமான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டு சிறை
அதாவது நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் முடிவுக்கு வர இருக்கிறது. எனவே பிரச்சாரம் முடிந்த பிறகு சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரிக்க கூடாது. இப்படி சேகரித்தால் இரண்டு ஆண்டுகள் சிறையும், நாளை மாலை 6:00 மணிக்கு பிறகு சோசியல் மீடியாவில் பிரச்சாரத்தை பகிர்ந்தாலும் 2 வருட சிறை, தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் நாளை மாலை 6:00 மணிக்குள் வெளியேற வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வரும் ஜூன் 4ம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.