புதுசேரியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை: மக்களவை தேர்தல் நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் அரசாங்கம் இருந்து வருகிறது. மேலும் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. அதன் பிறகு சமூக வலைத்தளத்தில் மக்களிடம் ஓட்டு கேட்க கூடாது என்றும், மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அ.குலோத்துங்கன் முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” புதுச்சேரியில் இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 144 தடை வரும் 20ம் தேதி வரை நீடிக்கப்படும். மேலும் மதுபான கடைகளுக்கும் கலால் துறையினர் சீல் வைத்துள்ளனர். இருந்தாலும் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு, இந்த 144 தடை உத்தரவு பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.