தமிழகத்தில் இதுவரை 1297 கோடி தங்க நகைகள் பறிமுதல்: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீவிரமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற இருக்கிறது. இதனால் அரசியல் தலைவர்கள் வீடு வீடாக சென்று மக்களின் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்து தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரும் பொருட்கள் மற்றும் பணம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
தமிழகத்தில் இதுவரை 1297 கோடி தங்க நகைகள் பறிமுதல்
அதுமட்டுமின்றி மக்களின் ஓட்டுக்களை பெற அரசியல் கட்சியினர் கொடுக்க இருக்கும் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஷாக்கிங் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இப்பொழுது வரை தமிழகத்தில் 1,297 கோடி தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.