
PBKS vs MI: கடப்பாரை மும்பையை வீழ்த்துமா பஞ்சாப் கிங்ஸ்? நடப்பாண்டு ஐபிஎல் சீசன் 17 கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி பாதி கிணற்றை தாண்டி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இன்று நடக்க இருக்கும் 32 வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டி என்று எல்லாருக்கும் தெரியும். ஏனென்றால் இந்த ஆண்டு சீசனில் மும்பை அணி இதுவரை 6 போட்டிகளில் 2 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதே போல் பஞ்சாப் அணி 6 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. எனவே இன்று நடக்க இருக்கும் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ புள்ளி பட்டியலில் மேலோங்கி வர வாய்ப்பு இருக்கிறது. இதனால் மகாராஜா யாத்வேந்திர சிங் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்க இருக்கும் போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே இன்றைய நாளில் கடும் போட்டி நிலவும். மேலும் இதுவரை நடந்த IPL சீசனில் இந்த இரண்டு அணிகளும் 31 முறை நேருக்கு நேர் மோதி உள்ளது. இதில் மும்பை அணி 16 போட்டிகளும், பஞ்சாப் அணி 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.