AC Helmet வந்தாச்சு? இனி வெயிலை பார்த்து பயப்பட தேவையில்லை: தற்போது நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் வேலைக்கு வெளியே செல்ல கூட பயப்படுகிறார்கள். அடிக்குற வெயிலுக்கு ஏசியில் தலையை விட்டாலும் கூட வெப்பத்தை தணிக்க முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் மக்களை வெயில் இருந்து பாதுகாக்கும் வகையில் தற்போது புதிதாக AC ஹெல்மெட் என்ற ஒன்றை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது பொதுவாக ஹெல்மெட்டை உயிரை காக்கும் கருவியாக மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது வெயிலில் இருந்து காக்கும் விதமாக AC ஹெல்மெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் நீண்ட நேரம் ஹெல்மெட் அணியும் பொழுது தலைப்பகுதியில் மிகுந்த வியர்வை காணப்படும் என்பதால் சிலர் ஹெல்மெட் அணிவதை தவிர்த்து போக்குவரத்து காவல்துறை யிடம் சிக்கி கொண்டு அபராதம் கட்டி வருகின்றனர். இதை தடுக்கும் விதமாக தான் AC பொருத்தப்பட்ட ஹெல்மெட் சந்தைக்கு வந்துள்ளது. ஆனால் இது வந்து பல வருடங்கள் ஆகிவிட்டதாகவும், வெளிநாடுகளில் பரவலாக கிடைக்கப்படும் இவை, import செய்தால் இந்தியாவிலும் கிடைக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
PBKS vs MI: கடப்பாரை மும்பையை வீழ்த்துமா பஞ்சாப் கிங்ஸ்? இரு அணிகளுக்கும் இன்று பலபரிச்சை!
மேலும் வெயிலில் கால் கடுக்க நின்று போக்குவரத்தை கவனித்து வரும் காவல்துறைக்கு இது முற்றிலும் பயன்படும். அதன்படி குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் இருக்கும் போக்குவரத்து துறை காவலர்களுக்கு IIM மாணவர்கள் தயாரித்த ஹெல்மெட்டை முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கிடைக்கும் இந்த ஹெல்மெட்டின் விலை சுமார் 34 ஆயிரம் ரூபாயாகும்.