
இந்திய அணியில் இடம் பிடித்த கனா பட பிரபலம்: வங்கதேச அணிக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் போட்டியிடும் இந்திய அணியில் விளையாடும் 16 வீராங்கனைகள் குறித்த அறிவிப்பை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நடக்க இருக்கும் போட்டியில் இந்திய அணிக்காக சிவகார்த்திகேயன் நடித்த கனா பட பிரபலம் கலந்து கொண்டு விளையாட இருப்பது தான். அதாவது கனா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தோழியாக நடித்தவர் தான் சஜீவன் சஜனா. இவர் அப்படத்தில் மட்டுமின்றி நிஜமாகவே கிரிக்கெட் வீரர் என்று யாருக்கும் தெரியாது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக்கில் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்தார். அதுமட்டுமின்றி மகளிர் பிரீமியர் லீக்கில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் இவரை இந்திய அணி முதல் முறையாக விளையாட அழைப்பு விடுத்துள்ளது. இதனால் கண்டிப்பாக அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்டுகிறது.