சென்னையில் பெண்களுக்காக ‘பிங்க்’ நிற வாக்குச்சாவடி மையங்கள்: தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்க இருக்கும் நிலையில் மக்கள் ஓட்டு போடுவதற்கு வசதியாக கிட்டத்தட்ட 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னையில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடிகள் 944 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 685 பதற்றமான வாக்குச்சாவடிகளும், 23 மிகவும் பதற்றமான வாக்குச்சாடிகளும் என 708 வாக்குச்சாவடிகள் இதில் அடங்கும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் பெண்களை கவரும் விதமாக சென்னையில் சென்னையில் 16 இடங்களில் பிங்க் நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த பிங்க் வாக்குச்சாவடி மையங்களுக்கு கர்ப்பிணி பெண்கள் மற்றும் மூதாட்டிகள் பிரத்யேக வசதிகளுடன் உதவி மையம், முதியோர் ஓய்விடம், குழந்தைகள் விளையாடும் இடம், சாய்தளம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி அவர்களுக்கு என்று தனி வரிசையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வெயிலில் யாரும் நிற்க கூடாது என்பதற்காக தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இங்கு பெண்கள் மட்டுமல்லாமல் அனைவரும் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.