தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் சரிவு: இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. இதன் முதற்கட்டமாக நேற்று தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதாவது நேற்று தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. குறிப்பாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் நேற்று காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து நேற்று நடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தம் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 3% சரிந்து ” 69.46% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்தல் அதிகாரி ராதா கிருஷ்ணன் பேசுகையில், நகர்புறங்களில் 10ல் 4 பேர் வாக்களிக்க தவறிவிட்டனர். கடந்த தேர்தலை காட்டியும் இந்த தேர்தல் சற்று சரிவை சந்தித்துள்ளது. மேலும் ஜூன் 4ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.