20 வருஷமாகியும் கொண்டாடப்படும் கில்லி படம்.. ரீ ரிலீசில் சும்மா வசூல் அள்ளுதே!20 வருஷமாகியும் கொண்டாடப்படும் கில்லி படம்.. ரீ ரிலீசில் சும்மா வசூல் அள்ளுதே!

20 வருஷமாகியும் கொண்டாடப்படும் கில்லி படம்: தளபதி விஜய்யின் சினிமா கெரியரில் எத்தனையோ படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்திருந்தாலும் ரசிகர்களின் பேவரைட் படம் என்றால் அது கில்லி தான். கடந்த 2004ம் ஆண்டு வெளியான இப்படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா, வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்திருந்தனர். என்ன தான் இப்படம் தெலுங்கு படத்தின் டப்பிங்காக இருந்தாலும், தமிழில் இந்த அளவுக்கு வெற்றி அடைய காரணம் விஜய் தான். இந்நிலையில் இந்த படம் தற்போது 20 வருடங்களுக்கு ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

20 வருஷமாகியும் கொண்டாடப்படும் கில்லி படம்

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளில்  வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் விசிலடித்து, ஆடிப்பாடி கொண்டாடி வரும் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் மட்டும் கில்லி படம் வசூல் செய்துள்ளது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சென்னையில் மட்டும் கில்லி படம் 3.5 லட்சத்தை தொட்டிருக்கிறது. இதை வைத்து பார்க்கும்போது இப்ப மட்டும் இல்லை எப்பொழுதுமே ஆட்டநாயகன் வசூல் நாயகன் விஜய் தான் என்று அவருடைய படங்கள் தொடர்ந்து நிரூபித்து காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

விளம்பரத்திற்காக ரூ 3641 கோடி செலவு செய்த பாஜக கட்சி –  RTI மூலம் அம்பலம் – அதிர்ச்சியில் மக்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *