இனிதே தொடங்கிய மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தேரோட்டம்: உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா வருடந்தோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து சித்திரை திருவிழாவின் முக்கிய அங்கமாக இருக்கும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
தேரை இழுக்க பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டனர். அதுமட்டுமின்றி இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். மூல வீதிகளில் சுற்றி கடைசியாக விளக்குத்தூண் பகுதியில் இருக்கும் தேர்முட்டி என்ற இடத்தில் தேர் நிறுத்தப்பட இருக்கிறது. இதனை தொடர்ந்து மீனாட்சி கல்யாணத்தை பார்க்க அழகர் மதுரை வந்தடைந்தார். மேலும் நாளை அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள இருப்பதால் மதுரை மக்கள் ஆவலுடன் வரவேற்க காத்து கொண்டிருக்கின்றனர். இதற்காக பல ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.