17 வயதில் சாதனை படைத்த செஸ் வீரர் குகேஷ்: கனடாவில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் என்ற போட்டி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த போட்டியின் இறுதிப் போட்டிக்கு சென்ற இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் கடைசி சுற்றில் அமெரிக்காவின் நகமுரா என்பவரை எதிர்கொண்டார். மேலும் நடந்த போட்டியில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். எனவே இதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அவரை தொடர்ந்து நகமுரா 8.5 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். மேலும் இந்த போட்டியில் வெற்றி வாகை சூடியதை காரணமாக குகேஷ் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள தகுதி பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்றவர் என்ற சாதனையை குகேஷ் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்றவர் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தமிழக முதல்வர் நேரில் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.