கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை: தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் முதியவர்கள் முதல் நோயாளிகள் வரை கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு அடுத்தடுத்து தேர்வுகள் நடைபெற இருக்கிறது. அதன்பின்னர் கோடை விடுமுறை விடப்பட இருக்கிறது. இதனை தொடர்ந்து கோடை விடுமுறை நாட்களில் 10 வகுப்பு மற்றும் 12 வகுப்புக்கான சிறப்பு வகுப்புகள் தனியார் பள்ளிகளில் நடைபெற்று வருவதாக தெரிய வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுவும் மாணவர்கள் பள்ளி சீருடை இன்றி கலர் ஆடைகளை அணிந்து வகுப்பில் கலந்து கொண்டு வருகிறார்கள் என கூறப்படுகிறது. மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று நோக்கத்தில் தனியார் பள்ளிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளி கல்வி துறை அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு உள்ளது. அதாவது கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறக்கும் வரை சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்றும், திறந்த பிறகு சிறப்பு வகுப்புகள் நடத்தலாம் என தெரிவித்துள்ளது.