மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு – மதுரை மண்ணின் ராணியாக இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா மக்களால் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த திருவிழாவின் 10ம் நாள் நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. மேலும் இந்த திருவிழாவின் உச்சபட்ச நிகழ்வான கள்ளழகர் வைகையில் எழுந்தருளல் விழா, நாளை (ஏப்ரல் 23) நடைபெற இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
எனவே அழகரை பார்த்து அருளை பெற உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியிடங்களில் இருந்தும் எக்கச்சக்கமான பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே இதனை கருத்தில் கொண்டு நாளை (ஏப்ரல் 23) மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி நாளை உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகிற மே 11ம் தேதி வேலை நாளாக அறிவித்தார். அதே போல் நாளை நடக்க இருந்த 4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் தேர்வு, நாளை மறுநாள் (ஏப்ரல் 24) நடைபெறும் என குறிப்பிட்டுள்ளனர்.