பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளி போகிறதா? தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மற்றும் 10 வகுப்புக்கான பொதுத்தேர்வு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான இறுதி தேர்வுகள் ஏப்ரல் 24ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. அதன்பின்னர் கோடை விடுமுறை நாட்களை மாணவர்கள் கொண்டாட தொடங்கி விடுவார்கள். மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை நாட்கள் என்பதால் வழக்கமாக ஜூன் 1ம் தேதி அல்லது 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனால் பள்ளி மாணவர்களுக்கு எந்த நோயும் தாக்கிவிட கூடாது என்பதற்காக அரசு பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை வரும் ஜூன் 6 ஆம் தேதியும் , 10 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் முதல் வாரத்திலும், எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்கு ஜூன் 17ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வெயில் வெளுத்து வாங்கும் நிலையில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கோடை விடுமுறை நாட்கள் நீடிக்கும்? என சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.