மக்களவை தேர்தலில் போட்டியிடும் மாடு மேய்க்கும் பட்டதாரி பெண்? – தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட தேர்தலுக்காக பல்வேறு கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் பி.காம் பட்டதாரியான பரேலேகா. அவர் பட்டப்படிப்பு முடித்த போதிலும் தகுதி கேற்ற வேலை கிடைக்காததால் எருமை மாடு மேய்க்கும் தொழிலில் இறங்கினார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
அப்போது இருந்து அவரை மாடு மேய்க்கும் பெண் என கூறி வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நடந்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் கோலாப்பூர் தொகுதியில் அவர் சுயேச்சையாக போட்டியிட்டார். அப்போது அவருக்காக பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சாரம் செய்தனர். அதன் மூலம் அவர் நடந்து முடிந்த தேர்தலில் 5,754 வாக்குகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் நாகர் கர்னூல் மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பரேலேகா போட்டியிடுகிறார். மீண்டும் தேர்தலில் களமிறங்கிய அவர் இது குறித்து கூறியதாவது, ” கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் நான் வாக்குகள் பெற்றேன். மக்கள் என் மேல் உள்ள நம்பிக்கையில் நேர்மையாக வாக்களித்தார்கள். மக்களவை தேர்தலிலும் நான் வெற்றி பெறுவேன்” என்று தெரிவித்துள்ளார்.