விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு - தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு - தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு: மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. மேலும் வருகிற ஜூன் 1ம் தேதி வரை நடக்க இருக்கும் இந்த தேர்தலின் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் VV pad விவிபேட் எனப்படும் ஒப்புகைச் சீட்டு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு

இந்த வசதி மூலம் வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போடுகிறார் என்று ஒப்புகை சீட்டு 6 வினாடிகள் காண்பித்து உள்ளே விழுந்து விடும். இந்த ஒப்புகைச் சீட்டு வாக்கு எண்ணும் போது முழுமையாக எண்ணப்படுவது இல்லை. எனவே வாக்கு இயந்திரங்கள் மீது கோளாறுகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அரசியல் கட்சியினர் கூறி வந்த நிலையில், ஒப்புகைச்சீட்டுகளை 100 சதவீதம் எண்ண வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். அதாவது, ” Microcontroller ஒரு முறை மட்டுமே Program செய்யக்கூடியதா?, Microcontroller எதில் பொருத்தப்பட்டுள்ளது. VV – Pad அல்லது Micro- Controller, எத்தனை Ballot Unit களில் சின்னங்கள் பொருத்தப்படும்?, VV – Pad இயந்திரம் தனியாக வைக்கப்படுமா?, Control Unit மட்டும் சீல் வைக்கப்படுமா? என தொடர்ந்து கேள்விகளை எழுப்பினார். மேலும் இந்த கேள்விகளுக்கு மதியம் 2 மணிக்குள் தேர்தல் அதிகாரி விளக்கம் கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.  

உயிரை குடிக்கும் ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuit) – உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *