ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் - வெறும் 20 ரூபாய்க்கு மீல்ஸ் - தெற்கு ரயில்வே துறையின் அசத்தல் திட்டம்!!ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் - வெறும் 20 ரூபாய்க்கு மீல்ஸ் - தெற்கு ரயில்வே துறையின் அசத்தல் திட்டம்!!

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் – வெறும் 20 ரூபாய்க்கு மீல்ஸ்: தெற்கு ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பயணிகளுக்காக பல வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது மலிவான விலையில் உணவு பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்தை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் தற்போது கோடை கால விடுமுறையை கொண்டாட சுற்றுலா செல்லும் பயணிகளுக்காக முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதலில் , சென்னை கோட்டத்தில் 5 ரயில்நிலையங்களிலும், மதுரை கோட்டம் – 2, திருவனந்தபுரம் கோட்டம்-11, திருச்சி கோட்டம்- 3, சேலம் கோட்டம் -4,  பாலக்காடு கோட்டம் -9  என தெற்கு ரயில்வே சார்பில் முதல் கட்டமாக 34 ரயில் நிலையங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் – வெறும் 20 ரூபாய்க்கு மீல்ஸ்

கடந்த  17-ம் தேதி முதல் செயல்முறையில் இருந்து வரும் இந்த திட்டத்தின் மூலம்  200 கிராம் எடையில், எலுமிச்சை, புளியோதரை, தயிர் சாதம் அல்லது கிச்சடி என ஏதாவது ஒன்று ‘எகனாமி மீல்ஸ்’ என்ற பெயரில் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி 325 கிராம் எடையில் பூரி மசால் மற்றும் பஜ்ஜி, ‘ஜனதா கானா’என்ற பெயரில் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 350 கிராம் எடையில் மசால் தோசை, ‘ஸ்நாக் மீல்ஸ்’ என்ற பெயரில் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 200 மி.லி. தண்ணீர் பாட்டில் ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு நடைமேடையில் கவுண்ட்டர்கள் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளன.

வெப்ப அலை எதிரொலி – 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *