தங்கச்சி கல்யாணத்துக்கு தங்க மோதிரம் & டிவி வாங்கி கொடுத்த கணவன்: இன்றைய காலகட்டத்தில் வித்தியாசமான வித்தியாசமான விஷயங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கணவன் தனது தங்கச்சி கல்யாணத்துக்கு டிவி, மோதிரம் வாங்கி கொடுத்தற்காக மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரபிரதேச மாநிலம் சேர்ந்த சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35) என்பவருக்கு திருமணமாகி சாபி என்ற மனைவி இருக்கிறார். மிஸ்ராவிற்கு தங்கை இருக்கும் நிலையில் அவருக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 26) திருமணம் நடைபெற இருந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் தனது தங்கச்சிக்காக தங்க மோதிரம் மற்றும் டி.வி., ஒன்றை பரிசாக வாங்கி கொடுக்க மிஸ்ரா முடிவு செய்தார். இதனால் அவருடைய மனைவி கோபமடைந்தார். மேலும் இதற்காக இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்தது. இதனை தொடர்ந்து சாபி தனது சகோதரர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு கட்டத்தில் தகராறு ஏற்பட்டது. சுமார் 1 மணிநேரமாக சந்திர பிரகாஷை சாபியின் சகோதரர்கள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்திர பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக சந்திர பிரகாஷின் மனைவி சாபி உள்பட 5 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.