
காதலன் முகத்தில் ஆசிட் அடுத்த ஆசை காதலி: சமீப காலமாக பெண்கள் மீது ஆண்கள் ஆசிட் அடித்து வந்த நிலையில், தற்போது ஒரு பெண் தனது காதலன் மீது ஆசிட் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்த ராகேஷ் பிந்த்(26) என்ற இளைஞர் லட்சுமி என்னும் பெண்ணை தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நன்றாக போய்க் கொண்டிருந்த அவர்களின் லவ் வீக வாழ்க்கையில் ஒரு பெண்ணால் இடையூறு வந்தது. அதாவது ராகேஷ் பிந்துவுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அப்போது லட்சுமி நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அவரது கையில் இருந்த ஆசிட்டை காதலன் முகத்தில் அடித்தார். இதனால் ராகேஷ் பிந்துவுக்கு முகம் மற்றும் கை சில பகுதிகளில் காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் லட்சுமியை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணை நடத்திய காவல்துறையிடம் தன்னை காதலித்து வேறொரு பெண்ணை மணக்க சென்றதால் தான் இப்படி செய்தேன் என்று லட்சுமி கூறியுள்ளார். தற்போது காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.