கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் பேங்க் திடீர் தடை: உலகில் பிரபல வங்கியாக இருந்து வரும் கோடக் மஹிந்திரா பேங்கில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ” கோடக் மகேந்திரா வங்கி தகவல் பாதுகாப்பு குறைபாடு மற்றும் ஆன்லைன் வங்கி சேவைக்காக ரிசர்வ் வங்கி விதிகளை மீறியதாகவும், வங்கியுடைய IT systems மீது கடந்த 2 வருடங்களாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை தெரிவித்து வந்ததாகவும் ஆனால் அவற்றை சரி செய்ய கோடக் மகேந்திரா வங்கி தரப்பில் எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தான் ஆன்லைன், மொபைல் மூலமாக எந்த ஒரு புதிய கணக்குகளோ புதிய கிரெடிட் கார்டுகளோ கோடக் மகேந்திரா வங்கியில் தொடங்கக் கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் மற்றபடி ஏற்கனவே இருக்கும் வங்கி நடவடிக்கைகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.