கோவை வடவள்ளி பெருமாள் கோவில் நகைகள் திருட்டு. கோயமுத்தூரில் மிகவும் பேமசான கோவிலாக விளங்கி வருவது தான் மருதமலை முருகன் கோயில். மேலும் இது சார்ந்து பல கோவில்கள் உள்ளன. அதில் ஒன்று தான் வடவள்ளி அருகாமையில் இருக்கும் கரிவரதராஜ பெருமாள் கோயில். இந்த கோயிலில் 30க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து, துணை ஆணையர், நகை சரிபார்ப்பு அலுவலர்கள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நகைகளை பரிசோதனை செய்துள்ளனர்.
கோவை வடவள்ளி பெருமாள் கோவில் நகைகள் திருட்டு
அப்போது சுவாமிக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை கொண்ட தங்கத்தினாலான தங்க தாலி மற்றும் குண்டுமணிகள் திருடப்பட்டு, அதற்கு பதிலாக போலி நகைகள் செய்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் . இதனை தொடர்ந்து இது தொடர்பாக இந்த கோயிலில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு தினக்கூலி அர்ச்சகராக வேலை பார்த்த ஸ்ரீவத்சாங்கன் (40) என்பவரை போலீஸார் விசாரணை நடத்தினர்.
பீகார் மாநிலம்: ஹோட்டலில் திடீர் தீ விபத்து – 6 பேர் உயிரிழப்பு – வெளியான ஷாக்கிங் தகவல்!!
இதனை தொடர்ந்து திருடியதாக ஒப்பு கொண்ட அவர் நகைகளை கோவை ராஜவீதி பகுதியில் உள்ள கடை ஒன்றில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் விற்பனை செய்யப்பட்ட 14 கிராம் தங்க நகைகளை மீட்டனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர் இதற்கு முன்னர் புதுப்பேட்டையில் உள்ள கோதண்டராமர் கோயிலில் 8 கிராம் தங்கம் மற்றும் 7 கிலோ வெள்ளி ஆகியவற்றை திருடியதற்காக 60 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.