விவிபேட் வழக்கு விவகாரம் - வாக்கு பதிவு எணிக்கையில் வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்த உச்ச நீதிமன்றம்!!விவிபேட் வழக்கு விவகாரம் - வாக்கு பதிவு எணிக்கையில் வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்த உச்ச நீதிமன்றம்!!

விவிபேட் வழக்கு விவகாரம்: விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் 100 சதவீத ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் உச்சநீதிமன்றம்  அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதாவது  100 சதவீதம் சரிபார்க்க கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் வேட்பாளர்களுக்கு ஏதுவாக ஒரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

அதாவது தேர்தல் நடந்து முடிந்த பின்னர் வருகிற ஜூன் 4ம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. எனவே வாக்குப்பதிவு போது இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் இருக்கும் வேட்பாளர்கள்  VVPAT இயந்திரங்கள் சரிபார்க்க விரும்பினால் முடிவுகள் வெளியான 7 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் எழுத்துபூர்வமான விண்ணப்பங்களை பெற்ற பிறகு தான் பொறியாளர் குழு EVM எந்திரத்தை சோதனை செய்ய வேண்டும்.

HMD நிறுவனத்தின் HMD Pulse மொபைல் போன்கள் இந்தியாவில் அறிமுகம்? சந்தையில் வியாபாரம் எப்போது?

அதுமட்டுமின்றி சோதனையின் போது வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். மேலும் சோதனையில் மாவட்ட தேர்தல் அதிகாரி எந்திரத்தின் நிலையை தெரிவிக்க வேண்டும். இதற்காக ஆகும் செல்வம் வேட்பாளர்கள் தான் ஏற்க வேண்டும். இதில் ஏதாவது கோளாறு இருந்தால் தேர்தல் அதிகாரி அந்த தொகையை திருப்பி வழங்க வேண்டும் என்று  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *