
கைலி கட்டி மூடை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன்: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கைலி கட்டி மூடை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன்
இப்பொழுது வரைக்கும் 45 சதவீதம் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் புதுச்சேரியில் வேளாண்மைத் துறை அமைச்சராக பணிபுரிந்து வந்தவர் தான் கமலக்கண்ணன். இவர் கடந்த 2016-2021 ஆண்டுக்கான காங்கிரஸ் அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராக செயலாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை நடந்த மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார்.
விவிபேட் வழக்கு விவகாரம் – வாக்கு பதிவு எணிக்கையில் வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்த உச்ச நீதிமன்றம்!!
இந்நிலையில் கமலக்கண்ணன் குறித்து முக்கியமான வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் கைலி அணிந்து மூடை தூக்குகிறார். அவருக்கு ஓட்டு போட்ட மக்கள் பார்த்த போது, ” உங்களுக்கு ஓட்டு போட்டா நீங்க இந்த வேலை செய்கிறீர்கள் என்று கேட்க. அதற்கு அவர், ” இதெல்லாம் நாங்க செய்தால் தான் உங்களுக்கு சோறு கொழம்பு தயிர் கிடைக்கும் என்று சிரித்தபடி கூறியுள்ளார். இதை பார்த்த மக்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!