சென்னை உஸ்மான் சாலையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம் - எந்தெந்த பகுதிகளுக்கு தெரியுமா?சென்னை உஸ்மான் சாலையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம் - எந்தெந்த பகுதிகளுக்கு தெரியுமா?

சென்னை உஸ்மான் சாலையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்: சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற இருக்கிறது. எனவே நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ” மேம்பாலம் கட்டுமான பணிகள் நாளை முதல் நடைபெற இருப்பதால்,  வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பஸ் ஸ்டாண்ட் பகுதியை நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகாமையில் இருக்கும் உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மாற்று வழியாக வாகனங்கள் சர்வீஸ் ரோடு பகுதியில் சென்று பிரகாசம் சாலை,  தியாகராயர் சாலை, பாஷ்யம் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பேருந்துகள் மட்டும் பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு  அனுமதிக்கப்படும்.

சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் தங்க கட்டிகள் – அதிகாரிகள் விசாரணை!!

மற்ற இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ உள்ளிட்டவைகள் மூப்பாரப்பன் தெரு, தெற்கு தண்டபாணி தெரு, மன்னார் தெரு, மூசா தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்திற்கு அடையலாம். மேலும் தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை சென்ற அடைய மேட்லி ரவுண்டானா சாலையில் இருந்து பர்கிட் வழியாக சென்று வெங்கட் நாராயணன், நாகேஸ்வர ராவ் பகுதியில் சென்று இடது புறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *