Home » செய்திகள் » மணிப்பூரில் ஓயாத வன்முறை – பயங்கரவாத தாக்குதலில்  2 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி!!

மணிப்பூரில் ஓயாத வன்முறை – பயங்கரவாத தாக்குதலில்  2 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி!!

மணிப்பூரில் ஓயாத வன்முறை - பயங்கரவாத தாக்குதலில்  2 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி!!

மணிப்பூரில் ஓயாத வன்முறை: மணிப்பூரில் கடந்த சில நாட்களுக்கு இருதரப்பினர் இடையே பயங்கர தாக்குதல் நடைபெற்றதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக ஒரு பெண்ணை ஆடை இல்லாமல் சாலையில் இளைஞர்கள் இழுத்து சென்ற சம்பவம் இப்பொழுது வரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்து வருகிறது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் பயங்கரமான தாக்குதலில் ஈடுபட்டனர். நேற்று நள்ளிரவு தொடங்கிய இந்த தாக்குதல் அதிகாலை 2:15 மணிக்கு தான் முடிவுக்கு வந்தது.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இறந்த இரண்டு பேரும் சிஆர்பிஎப் 128 பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது. மேலும் இந்த தாக்குதல் குகி பயங்கரவாதிகள் தான் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் தான் நரன்செய்னா கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் இருந்து மத்திய பாதுகாப்புப் படையை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியது.

மேலும் நேற்று மணிப்பூரில் மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. மேலும் இந்த தேர்தலில் மணிப்பூரில் 75 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கையில் இந்த எதிர்பாராத தாக்குதல் அனைவரிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது பொய்? ஒடிசா ரயில் விபத்துக்கு இதுதான் காரணம்?  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top