
அட்சய திருதியை 2024. அட்சய திருதியை என்பது ஒரு காலத்தில் ஒருவருக்குமே தெரியாத பண்டிகையாக இருந்து வந்தது. சமிபகாலத்தில் தான் இப்பண்டிகை கொண்டாடப்படுவது பிரபலமானது. அட்சய திருதியை என்றால் அட்சயம் என்பது தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது என்று பொருள். அந்நாளுடன் சேர்ந்த திருதியை அதுதான் அட்சயதிருதி.
அட்சய திருதியை 2024
சமீப ஆண்டுகளில் பிரபலமான அட்சய திருதி நாள் மங்களகரமான நாளாகவும், மங்கல பொருட்கள் வாங்குவதற்கு ஏற்ற நாளாகவும் கருதப்படுகிறது.
இந்த ஆண்டு எப்போது :
மே 10, 2024, வெள்ளிக்கிழமை, நல்ல நேரம் (குளிகை)
காலை 07:33 முதல் 09:07 வரை
அட்சய திரிதியை புராணம்:
குசேலருக்கு கிருஷ்ணா பகவான் அருள்புரிந்து அவரை மிக உயர்ந்த செல்வந்தராக மாற்றிய நாள் என்றும் கூறப்படுகிறது. குசேலர் மிகவும் வறுமையில் வடியபோதும் கூட அவர் செல்வந்தராக ஆக வேண்டும் என்று ஒரு நாள் கூட நினைத்தது இல்லை. வறுமையால் தன் குழந்தைகள் பாதிக்கப்படுவது தாங்காமல் அவரது மனைவி அவரை செல்வம் பெற்று வரும்படி அனுப்பினார். ஆனபோதும், குசேலர் செல்வம் வாங்கும் நோக்கத்தில் இல்லாமல் அவரது நண்பனை பார்த்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே குசேலர் கிருஷ்ணரை காண வந்தாரா என்றும் அதனால் அந்த நல்ல எண்ணமே அவருக்கு செல்வதை கொடுத்தது என்றும் கூறப்படுகிறது. எனவே, குசேலருக்கு கிருஷ்ண பகவான் செல்வதை வாரி வழங்கிய திருநாளே அட்சய திருதி என்பது வரலாறு.
அக்னி நட்சத்திரம் 2024 ! அந்த 21 நாட்கள் வெயில் அதிகம் இருக்க காரணம் தெரியுமா.. இதோ முழு வரலாறு !
மேலும், இதே அட்சய திருதி திரு நாளில் தான் ஆதி சங்கரர் கனகதாரா சோஸ்திரம் அருளினார் என்றும் ஒரு வரலாறு உண்டு. கனகதாரா சோஸ்திரம் என்பது ஆதிசங்கரர் பவதீப்க்சாந்தேகி என்று கேட்டபோது தனிடத்திலே இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை, ஒரு குழந்தை இரவல் கேட்பதனால் இல்லை என்று சொல்லக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அக்கனியை தானம் கொடுத்ததால், அந்த நிலைமையை பார்த்து இந்த வறுமையிலும் இவர்கள் தானம் செய்கின்றார்களே என்று மகிழ்ந்துபோய் ஆதிசங்கரர் இந்த இல்லத்தினுடைய வறுமை நீங்கவேண்டும் என்று மஹாலக்ஷ்மியை நினைத்து பிரார்த்தனை செய்து பாடியதே கனகதாரா சோஸ்திரம். இந்த சோஸ்திரத்தை பாடிய பிறகு அவர்கள் வீட்டில் தங்க நெல்லி கனி மழையாக பெய்து அவர்கள் வறுமை நீங்கியது என்றும் நம்பப்படுகிறது. மேலும், இந்த அன்னபூரணி படி அளந்த திருநாள் என்றும் கூறப்படுகிறது. எனவே அட்சய திரிதியை மிகவும் சிறப்பம்சம் வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
அட்சய திரிதியை வழிபாடு:
அட்சய திரிதியை என்பது தானம் செய்வனதற்கான நாளாகும். இந்த நாளில் அரிசி, கோதுமை, பானகம், நீர்மோர், அன்னம் (சாதம்) தானம் செய்யலாம் என்றும் எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு தயிர் சாதம் கூட இந்த நாளில் தானம் செய்வதால் மகாலக்ஷ்மியின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது. தங்கம் வாங்கி சேர்ப்பதை விட தானம் செய்வதே நமக்கு மிகுந்த பலன்களை தரும்.